News August 14, 2024
இரவு சாப்பிட்டதும் உடனே தூங்கலாமா?

இரவு உணவு சாப்பிட்டதும் உடனடியாக சிலர் தூங்கச்சென்று விடுவர். இது சரியா? என சந்தேகம் இருக்கும். அதுகுறித்து மருத்துவர்கள் என்ன தெரிவிக்கிறார்கள் என பார்க்கலாம். உணவு சாப்பிட்டதும் தூங்க செல்லக் கூடாது. அது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும் என்று, மருத்துவர்கள் கூறுகின்றனர். இரவு உணவு சாப்பிட்டதும் நடைபயிற்சி மேற்காெண்டுவிட்டு தூங்கச்சென்றால் நல்ல தூக்கம் வரும் என அவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
Similar News
News January 14, 2026
PM மோடி தமிழர்களுக்கு தரும் மரியாதை: எல்.முருகன்

டெல்லியில் இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் PM மோடி நேரில் வந்து பங்கேற்பது, அவர் தமிழர்களுக்கு அளிக்கும் மரியாதை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், தமிழ் மொழியின் மீது PM மோடி அதிகமான பிரியத்தை வைத்துள்ளதாகவும், அதனால் தான் காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டாக நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 14, 2026
உலகமெங்கும் கால்பதிக்க தயாராகும் UPI!

இந்தியாவின் உள்நாட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான UPI-ஐ, பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி சேவைகள் செயலாளர் நாகராஜு தெரிவித்துள்ளார். இதன்மூலம் வெளிநாடு செல்லும் இந்தியர்கள் சிரமமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பூடான், சிங்கப்பூர், கத்தார், பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளில் தற்போது UPI வசதி செயல்பாட்டில் உள்ளது.
News January 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 580 ▶குறள்: பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். ▶பொருள்: கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.


