News March 18, 2025
நம்பர் சேமிக்காமல் வாட்ஸ்அப் கால் பண்ண முடியுமா?

கான்டாக்டில் நம்பரை சேமிக்காமலேயே வாட்ஸ்அப்பில் கால் செய்ய முடியும். அது எப்படி எனத் தெரிந்து கொள்வோம். வாட்ஸ்அப்பில் CALL பகுதிக்கு சென்று + என்பதை அழுத்த வேண்டும். இதையடுத்து, அங்கு திரையில் வரும் Call a Number என்பதை கிளிக் செய்தால், டயல் பேட் தோன்றும். இப்போது அதில் உங்களுக்கு தேவைப்படும் நம்பரை கொடுத்து டயல் செய்து பேசலாம். நம்பரை சேமிக்க வேண்டியதில்லை.
Similar News
News September 21, 2025
ஊருக்கு போனவங்க உடனே வாங்க: கதறும் USA கம்பெனிகள்

H-1B, H-4 விசா கொண்டுள்ள ஊழியர்கள் சொந்த நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தால், உடனே அமெரிக்கா திரும்புமாறு அமேசான், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், அமெரிக்காவில் இருப்பவர்கள் சர்வதேச பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிரம்பின் புதிய அறிவிப்பின் படி, <<17767608>>H-1B<<>> விசா கொண்டிருப்பவர்கள், இன்று இரவு 12 மணிக்குள் அமெரிக்கா திரும்பாவிட்டால், ₹88 லட்சம் செலுத்த வேண்டும்.
News September 21, 2025
வரலாற்று சாதனை படைத்த ‘லோகா’!

மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ உருவெடுத்துள்ளது. இப்படம் வெளியாகி 23 நாள்களில் உலகம் முழுவதும் ₹267 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக, மோகன்லால் நடித்த ‘L2 : எம்புரான்’ ₹265 கோடி வசூலித்ததே சாதனையாக கருதப்பட்டது. மோகன்லால், மம்முட்டி என பெரிய ஸ்டார்கள் இருக்க, ஒரு ஹீரோயின் முதன்மை கேரக்டரில் நடித்த படம், இவ்வளவு பெரிய வசூலை குவித்துள்ளது.
News September 21, 2025
ராகுலின் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு குழு

ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஆலந்தா தொகுதியில் 5,994 பேரின் பெயர்களை தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக நீக்கியதாகவும், இதுதொடர்பான ஆவணங்களையும் வழங்க மறுப்பதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், அனைத்து ஆவணங்களையும் வழங்கியதாக தேர்தல் ஆணையம் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்தது.