News May 7, 2025
3-வது குழந்தை பெத்துக்கலாமா? வேண்டாமா?

3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகை வழங்குவது குறித்து TN அரசு பரிசீலித்து வருகிறது. மக்கள் தொகையை அடிப்படையாக வைத்தே நிதிப்பகிர்வு, MP தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், எவ்வித நீண்ட கால திட்டங்களும் இன்றி மக்கள் தொகையை பெருக்க நினைத்தால், தமிழ்நாடும் வட மாநிலங்களை போல எதிர்காலத்தில் மாறிவிடும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். வேறு என்னதான் தீர்வு? நீங்க சொல்லுங்க..
Similar News
News September 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 15, 2025
ஹாக்கியில் சீனாவிடம் இந்தியா படுதோல்வி

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் ஹாக்கி அணி சீனாவிடம் 4-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்தியா முதல் கோலை அடித்து சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. பின்னர் சுதாரித்துக்கொண்ட சீனா அடுத்தடுத்து கோல்(4) மழை பொழிந்து இந்தியாவை திக்குமுக்காட வைத்தது. இந்த தோல்வியால் இந்தியா நேரடியாக WC-க்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
News September 15, 2025
₹153 கோடிக்கு வீடு வாங்கிய அம்பானி

ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி, அமெரிக்காவில் விலையுயர்ந்த வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூயார்க்கில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக இருந்த அந்த வீட்டை, ₹153 கோடி கொடுத்து அம்பானி வாங்கியுள்ளார். 20,000 சதுர அடி பரப்பளவுள்ள அந்த வீட்டில் 7 பெட் ரூம்ஸ், நீச்சல் குளம், 5,000 அடி திறந்தவெளி உள்பட பல வசதிகள் உள்ளன.