News May 7, 2025
3-வது குழந்தை பெத்துக்கலாமா? வேண்டாமா?

3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகை வழங்குவது குறித்து TN அரசு பரிசீலித்து வருகிறது. மக்கள் தொகையை அடிப்படையாக வைத்தே நிதிப்பகிர்வு, MP தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், எவ்வித நீண்ட கால திட்டங்களும் இன்றி மக்கள் தொகையை பெருக்க நினைத்தால், தமிழ்நாடும் வட மாநிலங்களை போல எதிர்காலத்தில் மாறிவிடும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். வேறு என்னதான் தீர்வு? நீங்க சொல்லுங்க..
Similar News
News November 22, 2025
ஒட்டியாணம் குறித்து சில தகவல்கள்

வாரணாசி பட விழாவில், பிரியங்கா சோப்ராவின் ஒட்டியாணம், பண்டைய இந்தியாவின் பாரம்பரியத்தை நினைவூட்டியது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பெண்கள், இடுப்பில் ஓட்டியாணம் அணிந்து வருகின்றனர். பழங்கால கோயில் சிற்பங்களிலும் இதை நாம் பார்த்திருப்போம். ஒட்டியாணம் குறித்து பலரும் அறியாத சில தகவல்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 22, 2025
பிரபலம் காலமானார்.. CM ஸ்டாலின் உருக்கமான இரங்கல்

<<18358061>>கவிஞர் ஈரோடு தமிழன்பன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தி வாசிப்பாளர், பேராசிரியர், இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தவர் என்றும் தனது கலைப்பணிக்காக எண்ணற்ற விருதுகளை குவித்தவர் எனவும் தமிழன்பனுக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இறுதிக்காலம் வரை தமிழுக்கு தொண்டாற்றியவர் என்றும் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
பொய் கதைகளில் இருந்து தப்புவது கடினம்: ஜக்தீப் தன்கர்

துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு, ஜக்தீப் தன்கர் பொதுவெளிக்கு வருவதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார். தற்போது 4 மாதங்களுக்கு பிறகு, முதல்முறையாக போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது, பொய் கதைகள் எனும் சக்கர வியூகத்தில் இருந்து தப்புவது கடினமானது என்று தெரிவித்தார். முன்னதாக, பாஜக அவரை வீட்டுச்சிறையில் வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின..


