News April 11, 2025
கொளுத்தும் வெயிலில் சில்லென பீர் அடிக்கலாமா?

அடிக்கும் வெயிலுக்கு சில்லென ஒரு பீர் குடிக்கலாம் என்பது பலரது எண்ணமாக இருக்கும். சில் பீர் அப்போதைக்கு இதமாக இருந்தாலும், பின்விளைவுகள் மோசமாக இருக்கும். பீர் ஒரு டையூரிடிக் என்பதால், உடலிலிருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றும். இதனால் நீரிழப்பு, வெப்ப சோர்வு, வெப்பத்தாக்கு அபாயம் அதிகரிக்கும். அதிகம் பீர் குடிப்பது சிறுநீரக கற்கள், சிறுநீரக செயலிழப்பிற்கும் வழிவகுக்கும். ஆகவே, எச்சரிக்கை தேவை!
Similar News
News January 1, 2026
இது பெரிய அவமானம்..

சர்பராஸ் கான் இந்திய அணியில் தேர்வாகாதது குறித்து Ex வீரர் திலீப் வெங்சர்க்கார் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை கடுமையாக விமர்சித்துள்ளார். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாட போதுமான நல்ல வீரர் சர்ஃபராஸ் கானை புறக்கணிப்பது மிகவும் அவமானம் என சாடியுள்ளார். விஜய் ஹசாரே தொடரில் கோவா அணிக்கு எதிரான போட்டியில் சர்பராஸ் கான், <<18721642>>157 ரன்களை<<>> விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 1, 2026
ப்ரீ புக்கிங்கில் வசூலை அள்ளும் ‘ஜனநாயகன்’

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், வெளிநாடுகளில் தொடங்கியுள்ள ப்ரீ புக்கிங்கிலேயே படம் தற்போது வரை சுமார் ₹15+ கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரிலீஸ் தேதி நெருங்க அது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
News January 1, 2026
கூட்டணி அமைச்சரவைக்கு வாய்ப்பு அதிகம்: பிரேமலதா

2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த கட்சியும் தங்களிடம் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் தமிழகம் காணாத ஒரு தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும் எனவும், இந்த முறை கூட்டணி அமைச்சரவை அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்றும் நம்பிக்கையுடன் அவர் தெரிவித்துள்ளார்.


