News June 2, 2024
நடைமேடை டிக்கெட் இல்லாமல் செல்லலாமா? கூடாதா?

ரயில் நிலையத்திற்குள் பயணிகள் அல்லாதோர் செல்ல வேண்டுமெனில் நடைமேடை டிக்கெட் கட்டாயம் எடுக்க வேண்டும். அந்த டிக்கெட் 2 மணி நேரம் மட்டுமே செல்லும். அதன்பிறகு அந்த டிக்கெட் இருந்தாலும் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். நடைமேடை டிக்கெட் இல்லாமல் பிடிபட்டாலும் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். டிடிஆரிடம் பிடிபட்டால் கடைசியாக புறப்படும், வரும் ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும்.
Similar News
News September 20, 2025
தனுராசனம் செய்வது எப்படி ?

தனுராசனம் செய்வதால், வயிற்று கொழுப்பு கரைவதுடன், உடல் வலுப்பெறும்.
*தரையில் குப்புற கைகள் & கால்களை நீட்டி படுக்கவும் *மெதுவாக கால்களை மடக்கி, முதுகுக்கு மேலே கொண்டு வரவும் *தலை & நெஞ்சுப்பகுதியை மேலே உயர்த்தி, இரு கைகளையும் பின்னோக்கி எடுத்து சென்று, பாதங்களை பிடித்து கொள்ளுங்கள் *வயிற்றுப்பகுதி தரையில் அழுந்தி இருக்க உடல் வில் போல் வளைய வேண்டும். SHARE IT.
News September 20, 2025
இன்று SUPER 4 சுற்று தொடக்கம்: SL vs BAN வெல்வது யார்?

ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இலங்கை vs வங்கதேச அணிகள் மோதுகின்றன. வழக்கம் போல் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முன்னதாக, இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை, இலங்கை வென்றிருந்தது. அதேபோல், ஆஃப்கனையும் வீழ்த்தி, இந்த சுற்றுக்கு தகுதிபெற வங்கதேச அணிக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
News September 20, 2025
திமுக கூட்டணியில் இருந்து விலகலா?

ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகளை கேட்பது என கே.எஸ்.அழகிரி கூறியதால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது, மறைமுகமாக தவெகவுடன் காங்., செல்வதற்கான சமிக்ஞை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்க நெருக்க, இதுபோன்ற கருத்துகள் வலுவடையும் என்றும், விஜய் உடன் காங்., நெருக்கமாக இருப்பதால் கடைசி நேரத்தில் கூட காங்., TVK பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.