News March 30, 2025
ரயில் பயணத்தில் மது அருந்தலாமா?

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்புக்கு சட்டம் மூலம் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது மது அருந்தக் கூடாது, அதேபோல் மது அருந்திவிட்டு இடையூறு செய்யக் கூடாது என்று ரயில்வே சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பயணிகளுக்கு ரயில்வே சட்டத்தின் 145ஆவது பிரிவின்கீழ் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News April 1, 2025
லக்னோ அணி முதலில் பேட்டிங்

லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்களிலும், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் நேரலையாக காணலாம்.
News April 1, 2025
ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் அவகாசம் தெரியுமா?

ரயிலில் உடனடி டிக்கெட், முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட் என பல டிக்கெட்டுகள் உள்ளன. இதில் பயணத் தேதியை திட்டமிட்டு முன்கூட்டி டிக்கெட்டை முன்பதிவு செய்ய ரயில்வே வசதி அமலில் உள்ளது. இந்த டிக்கெட்டை இந்தியர்கள் எனில் பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு இணையதளத்திலோ, டிக்கெட் கவுண்டர் மூலமோ முன்பதிவு செய்யலாம். வெளிநாட்டினர் எனில் 365 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யலாம்.
News April 1, 2025
நடிகை தாபா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்குப்பதிவு

அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷர்மிளா தாபா. நேபாளியான அவர், தமிழகத்தை சேர்ந்த நடன உதவி இயக்குனர் ரகுவை திருமணம் செய்து சென்னையில் வசிக்கிறார். பாஸ்போர்ட் நீட்டிப்புக்காக விண்ணப்பித்தபோது, புதிய முகவரியை கொடுத்துள்ளார். இதில் முறைகேடு இருப்பதாக கூறி உள்துறை அமைச்சகம் புகார் அளிக்கவே, பாஸ்போர்ட் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.