News June 6, 2024
அரசு ஊழியர்கள் பங்குகளை வாங்க முடியுமா?

பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்கள், கடன் பத்திரங்களில் சாதாரண குடிமகனை போல அரசு ஊழியர்கள் முதலீடு செய்வதில் எந்த தடையும் இல்லை. ஆனால், குறுகிய காலத்தில் பங்குகளை வாங்கி, விற்று வர்த்தகம் செய்ய முடியாது. இதற்கு முக்கிய காரணம், வேலை நேரத்தில் ஊழியர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டால், வேலையின் மீதான கவனம் குறையும் என அரசு நினைக்கிறது. அதே போல, அரசு ஊழியர்களின் அசையும் சொத்துக்களை கண்காணிப்பதும் சிரமம்.
Similar News
News August 8, 2025
9-ம் வகுப்பிலே கரியரை தீர்மானிக்கலாம்: அமைச்சர்

சென்னையில் மாநில கல்விக்கொள்கையை CM ஸ்டாலின் வெளியிட்டார். இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், அச்சம் நிறைந்த தேர்வு என்ற நிலையை மாற்றி மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். 9-ம் வகுப்பிலே கரியர் வழிகாட்டி பெற்று மாணவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
News August 8, 2025
ஆணுறுப்பில் மிளகாய் பொடி.. அஜித் மரண வழக்கில் திருப்பம்

கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், சிபிஐ விசாரணையில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணுறுப்பில் மிளகாய் பொடியை தூவி அஜித்தை போலீஸ் சித்ரவதை செய்த தகவல் ஏற்கெனவே வெளியானது. இந்நிலையில், தனிப்படை போலீஸுக்கு மிளகாய்ப் பொடி வாங்கி கொடுத்ததே அஜித்தின் நண்பர் பிரவீன் குமார்தான் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.
News August 8, 2025
₹50,925 சம்பளம்.. மத்திய அரசில் 550 காலியிடங்கள்!

மத்திய அரசின் நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 550 Administrative Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 21- 30 வயதுக்குட்பட்ட எந்த டிகிரி முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்டமாக தேர்வு நடைபெறும். ₹50,925- ₹90,000 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 30-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.