News July 7, 2024
நீரிழிவு நோயாளிகள் சத்துமாவுக் கஞ்சி குடிக்கலாமா?

நீரிழிவு நோயாளிகளுக்கு சத்துமாவுக் கஞ்சி போன்ற உணவுகள் உடல் நலனுக்கு உகந்தவை அல்ல என்று ஹெல்த் டயட்டீஷியன்ஸ் கூறுகின்றனர். சத்துமாவுக் கஞ்சியில் மிக விரைவாக செரிமானமாகக்கூடிய
கார்போஹைட்ரேட்ஸ் அதிகம். நீரிழிவாளர்களைப் பொறுத்தவரை கஞ்சியாகக் குடிக்காமல், நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை வைத்து சப்பாத்தியாகவோ, இட்லியாகவோ செய்து சாப்பிடுவதுதான் சிறந்தது.
Similar News
News September 24, 2025
மோசடி வழக்கில் சூர்யா வீட்டு பணி பெண் உட்பட 4 பேர் கைது

நடிகர் சூரியாவுக்கு 2021-ம் ஆண்டு முதல் தனி பாதுகாவலராக உள்ளவர் அந்தோணி. இவர் சூர்யா வீட்டில் வேலை செய்யும் சுலோச்சனாவின் மகன் நடத்தும் தங்க நாணயம் திட்டத்தில் ₹50 லட்சம் வரை டெபாசிட் செய்து ஏமாந்துள்ளார். ₹50 லட்சத்தில் ₹7 லட்சம் மட்டுமே அந்தோணிக்கு திரும்ப கிடைத்ததால், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சுலோச்சனா, அவரது மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News September 24, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 24, புரட்டாசி 8 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை:10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News September 24, 2025
PhonePe, CRED-ல் இனி இந்த சேவையை பெற முடியாது

PhonePe, CRED போன்ற ஃபின்டெக் செயலிகளை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் அம்சம் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களின் அடையாளங்கள் முழுமையாக சரிபார்க்கப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், RBI-ன் புதிய விதி, மேற்கூறிய சேவையை நிறுத்தியுள்ளது. இனி நெட்பேங்கிங், UPI, NEFT மற்றும் காசோலை மூலம் மட்டுமே வாடகை செலுத்த முடியும்.