News October 25, 2024
இபிஎஸ் கனவில் மட்டும் தான் முதல்வர் ஆகலாம்: தினகரன்

இபிஎஸ் கனவில்தான் முதல்வர் ஆவார் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் வரை இபிஎஸ் தலைமையில் அதிமுக தொடர்ந்தால், தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என்றும், அதிமுக என்ற கட்சியே அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடும் எனவும் தெரிவித்தார். அதிமுக தொண்டர்கள் இபிஎஸ் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும், அது 2026 தேர்தலில் வெளிப்படையாக தெரியவரும் என்றார்.
Similar News
News January 10, 2026
கோவை: பெண் குழந்தைக்கு ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News January 10, 2026
மூலிகை: மூட்டுவலியை நீக்கும் சித்தரத்தை!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, ➤சித்தரத்தையை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குறையும். ➤மூச்சுத்திணறலுக்கு அதிமதுரம், திப்பிலியை சித்தரத்தையுடன் சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம். ➤உலர்ந்த சித்தரத்தை & அமுக்கரா கிழங்கை தூளாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் மூட்டுவலி நீங்கும். ➤சித்தரத்தையை உலர்த்தி, நீரில் கொதிக்கவைத்து பருகினால், வறட்டு இருமல் தணியும். SHARE IT.
News January 10, 2026
தேர்தலில் புதியவருக்கு வாய்ப்பா? அண்ணாமலை

அரசியல் என்பது ஒரு படத்தின் மூலம் தீர்மானிக்கப்படும் விஷயமல்ல என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தலில் புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என இங்கி, பாங்கி போட்டு பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். திமுகவை அகற்ற வேண்டும் என முடிவெடுத்த பிறகு, ஆட்சியில் யார் அமர்ந்தால் அவர்களுக்கு ஆட்சி கொடுக்க தெரியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.


