News October 3, 2024
ஹரியானாவில் இன்றுடன் பரப்புரை நிறைவு

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது. 90 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்திற்கு அக்.5இல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 1 மாதத்திற்கு மேலாக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். காங்கிரஸ், பாஜக இடையே பலத்த போட்டி நிலவும், இம்மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்.8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
Similar News
News August 16, 2025
EPS, விஜய் உடன் கூட்டணி வைப்பது உறுதி: KC பழனிசாமி

BJP-யை கழற்றி விட்டுவிட்டு விஜய் உடன் கூட்டணி வைக்க EPS விரும்புவதாக ADMK Ex MP கே.சி.பழனிசாமி புதிய குண்டை போட்டுள்ளார். தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், BJP காட்டும் பாதையில் பயணிக்க TTV தினகரன் தயாராகிவிட்டார் என்றும் கூறியுள்ளார். OPS-ன் அரசியல் எதிர்காலம் இனி கேள்வி குறி என்ற அவர், OPS, CM ஸ்டாலினை சந்தித்தது மாபெரும் தவறு என உடைத்து கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News August 16, 2025
கல்வியில் TN வழியில் கர்நாடகா!

கர்நாடகாவில் விரைவில் மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என அம்மாநில CM சித்தராமையா தெரிவித்துள்ளார். கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, சமீபத்தில் அறிக்கையை சமர்பித்தது. அதில், இரு மொழிக் கொள்கை அவசியம் என கூறியிருந்த நிலையில், சித்தராமையா இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், சமீபத்தில் மாநிலக் கல்வி கொள்கை வகுக்கப்பட்டது.
News August 16, 2025
வாரம் ஒரு முறை… தம்பதிகள் கவனிக்க!

தம்பதியர், வாரத்துக்கு ஒரு முறையாவது தாம்பத்ய உறவில் ஈடுபடுவது உடல்நலத்தை மேம்படுத்தும் என கனடாவின் டல்ஹவுசி பல்கலை., ஆய்வுமுடிவு கூறுகிறது. தம்பதியரின் ஆர்வத்தை பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனினும், எண்ணிக்கை அதிகரிப்பால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரிய மாற்றம் இருக்காதாம். முழு ஈடுபாட்டுடன், காதலுடன், பரஸ்பர விருப்பத்துடன் உறவில் ஈடுபட்டால் ஆரோக்கியத்துடன் காதலும் நிலைக்கும்.