News May 9, 2024
இடி, மின்னலுடன் மழையால் கேமராக்கள் செயலிழப்பு

மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகியுள்ளன. மொத்தம் 270 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், பலத்த காற்று இடியுடன் மழை பெய்ததால் 100 கேமராக்கள் பழுதானது. இதனையடுத்து, ஒருமணி நேரத்தில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், தென்சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் 2 கேமராக்கள் பழுதாகியுள்ளன.
Similar News
News August 21, 2025
புதுமணத் தம்பதிகளுக்கு பட்டு வேட்டி, பட்டுச் சேலை: EPS

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் EPS, சில வாக்குறுதிகளையும் அவ்வப்போது அளித்து வருகிறார். இவை பெரும்பாலும் பெண்களுக்கானதாகவே உள்ளது. அந்த வகையில், ராணிப்பேட்டை பரப்புரையின்போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் புதுமணத் தம்பதிகளுக்கு இலவச பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். ஏற்கெனவே தீபாவளிக்கு சேலை போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தார்.
News August 21, 2025
தவெக மாநாடு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தவெக மாநாட்டுத் திடலை குடும்பமாக வந்து பார்த்ததை கூறி அக்கட்சியினர் சிலாகித்தனர். இதனிடையே, நேற்று மதுரைக்கு வந்த விஜய்யை காணக் கூடிய கூட்டத்தால், அவரது கார் ஊர்ந்தே சென்றது. இதனால் முதல் மாநாட்டைவிட மிக அதிகளவிலான தொண்டர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி எலியார்பத்தி, வலையங்குளம், காரியாப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ் விடப்பட்டுள்ளது.
News August 21, 2025
இதய நலனை பாதுகாக்கும் ஆலிவ் தேநீர்

இருதய பாதிப்புகளை ஏற்படுத்தும் LDL கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் ஆலிவ் இலையில் உள்ள ஒலியூரோபீனுக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆலிவ் இலை பொடியை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆலிவ் இலை டீ ரெடி. இந்த டீயை Low BP, நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனையின்படி பருகலாம்.