News December 10, 2024

புயலுக்கு முன் அமைதி: எச்சரிக்கும் ஈரான்

image

சிரியாவில் பஷார் அல் அசாத் அரசு கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது. இதுபற்றி ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள X பதிவில், ஆசாத் அரசின் வீழ்ச்சியை சிலர் கொண்டாடுகிறார்கள். நோவா காலத்தில் மழை வந்தபோது மக்கள் சந்தோஷப்பட்டனர். அதுவே பின், வெள்ளமாகி அவர்களை அடித்துச் சென்றது. அப்போதுதான் இறை தண்டனையை அவர்கள் உணர்ந்தனர். இது ஆரம்பமே எனத் தெரிவித்துள்ளது. போர் ஓய்ந்து மக்கள் புது வாழ்வு பெறுவது எக்காலமோ?

Similar News

News August 31, 2025

முதல் கட்சி… வேட்பாளர்களை அறிவித்த சீமான்

image

2026 தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி மாநாடு, பிரசாரம் என வேகமாக நகர்ந்து வருகின்றனர். ஆனால், சீமான் அதைவிட ஒரு படி மேலாக சென்று வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கிவிட்டார். ஆமாங்க, நேற்று நடைபெற்ற நாம் தமிழர் தமிழரின் மரங்களின் மாநாட்டில், திருவள்ளூர், திருத்தணி தொகுதிக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்தார். திருவள்ளூரில் செந்தில் குமாரும், திருந்தணியில் சந்திரன் என்பவரும் போட்டியிட உள்ளனர்.

News August 31, 2025

ரோஜா மலராக மலர்ந்த ருக்மினி வசந்த்

image

விஜய்சேதுபதியுடன் ‘ஏஸ்’ படத்தில் ஜோடி சேர்ந்ததன் மூலம், தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் ருக்மினி வசந்த். அடுத்து வெளி வரப்போகும் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும், அவர்தான் ஹீரோயின். தமிழில் அடுத்தடுத்து நிறைய படங்களை கையில் வைத்துள்ளார் ருக்மினி. அதேசமயம், சோஷியல் மீடியாவிலும் விதவிதமான போட்டோஸை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

News August 31, 2025

தேர்தல் பரப்புரைக்கு ரெடியான விஜய்..!

image

2 மாநாடுகளை நடத்தியுள்ள தவெக தலைவர் விஜய், அடுத்தகட்டமாக தேர்தல் பரப்புரைக்கு தயாராகி வருகிறார். செப்டம்பரில் திருச்சியில் இருந்து அவர் பரப்புரையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் பரப்புரைக்காக பிரத்யேக வாகனம் தயாராகி வருகிறதாம். முதற்கட்டமாக 100 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அவர் பயணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான சுற்றுப்பயண திட்டத்தை தவெக அரசியல் குழு தயார் செய்துள்ளதாம்.

error: Content is protected !!