News March 16, 2024

திண்டுக்கல்லில் கருத்தடை திட்டத்துக்கு அழைப்பு

image

திண்டுக்கல் ஆட்சியர் அறிக்கையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பெண் குழந்தையுடன் பெற்றோர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால், குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைக்கு பின் செய்தால் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை, ரசீது வழங்கப்படுகிறது.இதற்கு ஆதார் நகல் , குடும்ப புகைப்படத்துடன் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கேட்டுள்ளார்.

Similar News

News January 21, 2026

திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, பழனி பேருந்து நிலையம், புதிய தாராபுரம் ரோடு, தலைமை தபால் நிலையம் பகுதி, மதனபுரம், அயம்புள்ளி ரோடு, சன்னதி வீதி, பாரதி நகர், திருஆவினன்குடி, அரசு தலைமை மருத்துவமனை, பாளையம், ஆர்.எப்.ரோடு தெற்கு பகுதி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News January 21, 2026

அறிவித்தார் திண்டுக்கல் ஆட்சியர்!

image

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) பாரத்நெட் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்கிறது. விண்ணப்பங்கள் 01.01.2026–25.01.2026 வரை https://tanfinet.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது. தேர்வில் OFC/ONT பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை, SLA பின்பற்றுதல் போன்ற பணிகள் அடங்கும். விவரங்களுக்கு 044-24965595. மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

திண்டுக்கல் அருகே அதிரடி கைது!

image

திண்டுக்கல், வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர், கொத்துவா பள்ளிவாசல் அருகே, சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று சுற்றிவளைத்த போலீசார், இருவரை கைது செய்தனர். மேலும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!