News December 6, 2024
சாந்தனு நாயுடு விடுக்கும் அழைப்பு

புத்தக வாசிப்பு கற்பனைகளை வளர்க்கும். வாசிப்பு பழக்கத்தை மீண்டும் கொண்டுவர ரத்தன் டாடாவின் Trusted Manager சாந்தனு நாயுடு ஊர் ஊராக சென்று Bookies Meet நடத்துகிறார். மும்பை, புனே, பெங்களூர் டிச.8இல் ஜெய்ப்பூரில். பொது இடங்களில் ஒன்றுகூடி அமைதியாக வாசிக்கும் நிகழ்வு இது. சமூகமாக ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பித்தால் அது எளிதாக பழக்கமாகும் என்கிறார். உங்களுக்கு பிடித்த புத்தகம் எது?
Similar News
News December 6, 2025
புதிய கொடியை அறிமுகம் செய்தார் வைகோ

போதைப் பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வைகோ ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்கிறார். இந்நிலையில், ஜன.2-ல் திருச்சியில் தொடங்கும் இப்பயணத்துக்கான கொடியை CM ஸ்டாலின், வைகோவிடம் கொடுத்து பயணத்தை தொடங்கி வைக்கிறார். இப்பயணம் ஜன.12-ல் மதுரையில் நிறைவடைகிறது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னுடன் பங்கேற்பார்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.
News December 6, 2025
கோவில்பட்டியில் அரசன் பட பூஜை?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், டிச.8-ல் கோவில்பட்டியில் பட பூஜை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பிரமாண்டமான முறையில் வடசென்னை செட் போடப்பட்டுள்ளதாம். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு காம்போ வெற்றி பெறுமா?
News December 6, 2025
படத்திற்கு சான்றளிக்கும் குழுக்களில் 50% பெண்கள்!

பாலின சமத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், சென்சார் போர்டில் தணிக்கை மற்றும் மறுஆய்வு குழுக்களில், 50% பெண்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இதை உறுதி செய்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மாநிலங்களவையில் பதிலளித்த அவர், படங்களுக்கு சான்றளிக்கும் பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


