News April 17, 2025
முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 19, 2025
வாக்குகளை விற்பவர்கள் நாய், பூனையாக பிறப்பார்கள்

ம.பி., EX அமைச்சரும் பாஜக MLAவுமான உஷா தாக்கூர் பேசிய <
News April 19, 2025
அதிருப்தியை சமாளிக்க விருந்து வைக்கும் இபிஎஸ்

பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவில் எம்எல்ஏக்கள் உள்பட பலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் பணி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இபிஎஸ் முடிவெடுத்துள்ளார். இதனால், ஏப்.23-ம் தேதி இபிஎஸ் தனது வீட்டில் விருந்து வைத்து, அதிருப்தியில் இருப்பவர்களை சமாதனம் செய்ய செய்யவிருக்கிறார். இந்த விருந்தில் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
News April 19, 2025
சஞ்சு சாம்சனுக்கு ஓய்வா?

ஜெய்ப்பூரில் இன்று RR vs LSG இடையே போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள RR 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதனால், அந்த அணிக்கு இப்போட்டி வாழ்வா? சாவா? போட்டியாகும். கடந்த 16ஆம் தேதி நடந்த DC-க்கு எதிரான போட்டியில் RR கேப்டன் சஞ்சு சாம்சன், காயம் காரணமாக பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால், இன்றைய போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் என சொல்லப்படுகிறது.