News March 20, 2024
சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்- திமுக உறுதி

I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்தால், சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், “குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும். நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு. மாநில முதலமைச்சர்களைக் கொண்ட வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும். ரயில்வேக்கு தனி பட்ஜெட். புதிய கல்விக் கொள்கை ரத்து” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
Sports Roundup: பேட்மிண்டனில் லக்ஷயா சென் ஏமாற்றம்

*டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில், ஆடவர் இரட்டையரில் சாத்விக், சிராக் இணை அரையிறுதிக்கு முன்னேற்றம். *ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் லக்ஷயா சென் நேர் செட்களில் தோல்வியை தழுவினார். *புரோ கபடி லீக்கில் பாட்னா பைரேட்ஸ் 51-49 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது. *மகளிர் உலகக் கோப்பையில், இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது.
News October 18, 2025
மாநகராட்சி முறைகேட்டில் மர்மம் நீடிக்கிறது: நயினார்

மதுரை மாநகராட்சி முறைகேட்டில் சிறிய மீன்களை பலியிட்டு பெரிய தலைகளைக் காப்பாற்ற திமுக முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வலுப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை, நெல்லை, மதுரை மேயர்கள் ராஜினாமா செய்துள்ளது, திமுகவின் நிர்வாக தோல்வியை காட்டுவதாக கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து CBI விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியே வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
ராகுல் காந்தியை சாடிய அமெரிக்க பாடகி

டிரம்ப்புக்கு PM மோடி பயப்படுவதாக பதிவிட்ட ராகுல் காந்திக்கு, அமெரிக்க பாடகி மேரி மில்பென் கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப்புக்கு PM மோடி பயப்படவில்லை என குறிப்பிட்டுள்ள மேரி மில்பென், இந்திய நலனுக்கு எது சிறந்ததோ அதையே அவர் செய்வதாக கூறியுள்ளார். மேலும், ராகுலுக்கு இந்திய பிரதமராகும் திறமை இல்லை என்றும் தலைமைப்பண்பு பற்றி தெரிய வாய்ப்பில்லை எனவும் சாடியுள்ளார்.