News April 21, 2024
ஆட்சிக்கு வந்ததும் CAA ரத்து செய்யப்படும்

I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சர்ச்சைக்குரிய CAA சட்டம் ரத்து செய்யப்படும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. காங்., தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஆனால், CAA குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. இருப்பினும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்வோம் என உறுதியளித்தார்.
Similar News
News August 19, 2025
அன்புமணிக்கு தேதி குறித்த ராமதாஸ்; மீண்டும் நோட்டீஸ்

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில், அவர் கட்சியில் இருந்து இன்று நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அன்புமணிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31ம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதத்தின் வாயிலாகவோ அன்புமணி பதிலளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
அமித்ஷா மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது உண்மையா?

நெல்லையின் தச்சநல்லூர் பகுதியில் ஆக.22-ம் தேதி அமித்ஷா தலைமையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அனுமதி அளிக்க முடியாது என நெல்லை மாநகர துணை ஆணையர் கூறியதாக பாஜக குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், காவல்துறை சார்பில் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான அனுமதி பரிசீலனையில் உள்ளது எனவும், பேனர் வைக்க மட்டுமே அனுமதி மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
டி.ஆர்.பாலுவின் மனைவி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

சென்னை தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், நேரில் அஞ்சலி செலுத்தினார். என் ஆருயிர் நண்பர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு மறைவால் வேதனையடைந்தேன். ஆர்.பாலு மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.