News March 30, 2025
C Voter: சீமான் எத்தனை சதவீத ஆதரவை பெற்றிருப்பார்?

வெளியான C Voter கருத்துக்கணிப்பில், CM ஸ்டாலின் (27%), விஜய் (18%), இபிஎஸ்(10%), அண்ணாமலை(9%) வாக்குகளை சேர்த்தால், 64% தான் வருகிறது. இதில், சீமான் பெயர் இடம்பெறவில்லை. இந்த கணக்கில் மீதமிருக்கும், 36% நாங்க தான் எனவும், அடுத்த ஆட்சி எங்களுடையது தான் என்றும் சீமான் கூறுகிறார். அவரும் இந்த கருத்துக்கணிப்பில் இடம் பெற்றிருந்தால், அவர் எத்தனை சதவீத மக்கள் ஆதரவை பெற்றிருப்பார் என நினைக்கிறீங்க?
Similar News
News January 22, 2026
மெரினாவில் 300 கடைகள் மட்டும் தான்!

மெரினாவில் கடைகள் ஒதுக்கீட்டை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி என். பால் வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். உதவியாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி டி. மோகன்ராஜ் மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற துணை பதிவாளர் ஆர். ரங்கநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில் 300 கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை கமிஷனர் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News January 22, 2026
கருணை குடும்ப ஓய்வூதியம் ₹2,250 ஆக உயர்வு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணை குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கருணை ஓய்வூதியம் ₹4,500-லிருந்து ₹5,000 ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ₹2,000-லிருந்து ₹2,250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
News January 22, 2026
TTV தேர்தலில் போட்டியிடவில்லையா?

EPS-க்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த TTV தினகரன், CM வேட்பாளராக EPS இருக்கும் NDA கூட்டணியில் நேற்று மீண்டும் இணைந்தார். இந்நிலையில் அமமுகவின் தொகுதி பங்கீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சட்டமன்ற தேர்தலில் 8+ 1 ராஜ்யசபா சீட்டை TTV கேட்டுள்ளார். மேலும் இந்த முறை தான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், அந்த 1 ராஜ்யசபா சீட் மட்டும் கொடுத்துடுங்க என கண்டிஷனாக சொல்லிவிட்டாராம்.


