News June 1, 2024

C VOTER: ஆந்திராவில் 21-25 இடங்களில் பாஜக வெற்றி

image

ஆந்திராவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 21-25 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 0-4 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு தேர்தல் முடிவுகள் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News September 19, 2025

உழவர்களுக்கு துரோகம் இழைக்கும் திமுக: அன்புமணி

image

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமல் திமுக அரசு துரோகம் செய்வதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் ஏக்கருக்கு அறிவித்த ₹6,800 இழப்பீடு தொகை போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது ஏக்கருக்கு ₹30,000 வழங்க அரசு தவறினால் போராட்டம் நடத்துவேன் என்று அன்புமணி எச்சரித்துள்ளார்.

News September 19, 2025

சூப்பர் 4 சுற்றில் இந்தியா யாருடன் மோதுகிறது?

image

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா விளையாடும் போட்டிகளின் விவரம் வெளியாகியுள்ளது. குரூப் A-ல் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, வரும் 21-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதன் பிறகு 24-ம் தேதி வங்கதேசத்துடனும், 26-ம் தேதி இலங்கையுடனும் இந்தியா மோதுகிறது. சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 28-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

News September 19, 2025

காந்தாரா ரசிகர்களுக்கு 22-ம் தேதி காத்திருக்கும் டிரீட்

image

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழிலும் கொண்டாடப்பட்ட இப்படத்தின் 2-ம் பாகமான ‘காந்தாரா சாப்டர் -1’ பிரமாண்டமாக உருவாகி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 22-ம் தேதி 12.45 PM வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன் நடத்த கதையாக ‘காந்தாரா சாப்டர் -1’ உருவாகியுள்ளது.

error: Content is protected !!