News July 5, 2024
இடைத்தேர்தல்: அதிமுக முடிவால் யாருக்கு பயன்? (3/3)

விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு வாக்களிக்கும் எஸ்சி எஸ்டி பிரிவினர், இம்முறை திமுகவுக்கு அதிகம் வாக்களிப்பர் என்றும், அவர்களில் 5ல் ஒருவர் மட்டுமே பாமகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். சீமானின் நாதக கட்சி, 2024 தேர்தலில் 8,352 வாக்குகளும், 2019 தேர்தலில் 3,167 வாக்குகளும் பெற்றது. இதனால் அக்கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சொல்லப்படுகிறது.
Similar News
News September 22, 2025
தைராய்டு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை

தைராய்டு உள்ளவர்களுக்கு உணவு கட்டுபாடு மிகவும் முக்கியம். குறிப்பாக சில உணவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உணவு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 22, 2025
GST சேமிப்பு திருவிழா தொடங்கியது: PM மோடி

இன்று முதல் GST சேமிப்பு திருவிழா தொடங்கியுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், விவசாயிகள், பெண்கள், சிறு குறு நிறுவனங்கள் ஆகியவை GST சீர்திருத்தங்கள் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும் என்று கூறியுள்ளார். உள்நாட்டு பொருள்களை வாங்க வேண்டும் என்ற மோடி, தொழில், உற்பத்தி, முதலீட்டு சூழலை மேம்படுத்த மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News September 22, 2025
Cinema Roundup: காந்தாராவுக்கு குரல் கொடுத்த மணிகண்டன்

*தனுஷின் ‘இட்லி கடை’ படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. *’காந்தாரா சாப்டர் 1′ தமிழ் டப்பிங்கில் ரிஷப் ஷெட்டிக்கு ‘லவ்வர்’ மணிகண்டன் குரல் கொடுத்துள்ளார். * ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ஷுட்டிங் பூஜையுடன் தொடங்கியது. * ரஜினியின் ‘மனிதன்’ படம் அக்.10-ம் தேதி ரீ-ரிலீசாகிறது. * கார் ரேஸிங் 24H சீரிஸில் அஜித் குமாரின் அணி 3-வது இடத்தில் உள்ளது.