News January 24, 2025
இடைத்தேர்தல்: உதயநிதியின் மாஸ்டர் பிளான்

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தலில் 80% வாக்குகளை பெற, Dy CM உதயநிதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த இடைத்தேர்தலில் காங்.க்கு 65% வாக்குகள் கிடைத்தன. இம்முறை ADMK, BJP என பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துவிட்டன. அத்துடன், DMK போட்டியிடுவதால் 80% வாக்குகளை பெற திட்டமிட்டுள்ளதாம். இதற்காக, கடைசி 3 நாள்கள் உதயநிதியும், சில அமைச்சர்களும் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
Similar News
News November 26, 2025
உலகின் மிக அழகான கோட்டைகள் PHOTOS

கோட்டைகள், அரண்மனைகள் என்றாலே, ஏதோவொன்று நம்மை ஈர்க்கிறது. அவை, வரலாற்று கதைகளா, பிரம்மாண்டமான கட்டட கலையா, எது என்று தெரியவில்லை. ஆனால், நாம் வியந்து போகிறோம். அந்த வகையில், மிக அழகான கோட்டைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இந்தியாவை சேர்ந்த ஒரு கோட்டையும் இடம்பிடித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க.
News November 26, 2025
புஜாராவின் மைத்துனன் தற்கொலை

ராஜ்கோட்டில், கிரிக்கெட் வீரர் புஜாராவின் மைத்துனன் ஜீத் பபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் தான், Ex-Fiance கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஜீத் பபாரி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், மீள்வதற்கு வழிதெரியாமல் தான் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
News November 26, 2025
பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி

அயோத்தி ராமர் கோயிலில் தர்மக்கொடி ஏற்றியதை, பாபர் மசூதி இடிப்பு மற்றும் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு என குறிப்பிட்டு பாக்., விமர்சித்து இருந்தது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, மதவெறி மற்றும் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளில் ஊறிப்போன பாக்., எங்களுக்கு உபதேசம் செய்ய தேவை இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், சொந்த நாட்டின் மனித உரிமை பிரச்னைகளில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.


