News March 16, 2024
பொன்முடி தொகுதியில் இடைத்தேர்தல்? விளக்கம்
அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் தேர்தல் ஆணையம், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் என்று தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறது. அதனை நீக்கிவிட்டு புதிய அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
Similar News
News November 19, 2024
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் கேரள அரசு ‘சுவாமி சாட்போட்(Swami Chatbot) வாட்ஸ்அப் செயலியை உருவாக்கியுள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு தரிசன நேரம், காவல், மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட உதவிகளை 24 மணிநேரமும் வழங்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 6238008000 என்ற எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால், பக்தர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.
News November 19, 2024
தனுஷால் தொல்லை: நடிகைகள் பட்டியலை வெளியிட்ட பிரபலம்
தனுஷ் எந்தெந்த நடிகைகளுக்கு தொல்லை கொடுத்தார் என்ற விவரத்தை சுசித்ரா வெளியிட்டுள்ளார். யாரடி நீ மோகினியில் நயன்தாராவுக்கு தொல்லை கொடுத்ததாகவும், நஸ்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமாவுக்கும் தொல்லை கொடுத்துள்ளார் எனவும் சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். சுசித்ரா குறிப்பிட்ட நடிகைகள், நயன்தாரா பதிவுக்கு ஆதரவாக லைக் செய்திருந்தனர். அதில் ஐஸ்வர்யா முதலில் லைக் செய்தார். பிறகு எடுத்து விட்டார்.
News November 19, 2024
ஹிந்தி, ஆங்கிலத்தில் LIC இணையதளம் மாற்றம்
அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, LIC இணையதளம் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹிந்தி மொழி மட்டுமே இருந்ததாகவும் LIC விளக்கமளித்துள்ளது. முதலில் மொழித்தேர்வில், ஆங்கிலமும் ஹிந்தியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மொழித்தேர்வில் English என மாற்றப்பட்டுள்ளது. எனினும், முகப்பு பக்கம் ஹிந்தியிலேயே இருக்கிறது.