News March 16, 2024
26 தொகுதிகளில் இடைத்தேர்தல்

நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் 6 தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதியும், குஜராத்தில் 5 தொகுதிகளுக்கு மே 7ம் தேதியும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. உ.பியில் 4 தொகுதிகளுக்கும், மே.வங்கத்தில் 2 தொகுதிகளுக்கும், பீகார், தெலுங்கானா, தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்களில் தலா 1 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார்: சிவசங்கர்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு பேட்டியளித்த அவர், தேவையான நேரத்தில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். EB பாக்ஸ் உள்ள இடங்களில் மழை நீர் தேங்கினால் தெரியப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News October 19, 2025
பிரபல நடிகை அம்மா ஆனார் ❤️❤️

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. டெல்லி தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, குழந்தை பிறந்த செய்தியை கணவரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ராகவ் சத்தா தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு மண வாழ்க்கைக்குள் நுழைந்த இந்த தம்பதி, தற்போது பெற்றோர் என்ற பொறுப்புக்குள் அடியெடுத்து வைக்கின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
News October 19, 2025
தீபாவளியில் இந்த தவறுகளை பண்ணாதீங்க!

இருளின் மீது ஒளியும், அறியாமையின் மீது அறிவும் படரும் பண்டிகையே தீபாவளி. அன்று இந்த தவறுகளை செய்யக் கூடாது: *வீட்டில் எந்த இடத்திலும் இருள் சூழக் கூடாது *தீபாவளிக்கு அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்து முதியவர்கள், உடல்நலம் பாதித்தவர்களையும் தொந்தரவு செய்ய வேண்டாம் *அதேபோல் எந்த விலங்கையும், குறிப்பாக பட்டாசு சத்தத்தால் பயப்படும் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது.