News March 16, 2024

திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ?

image

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியிலும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது திருக்கோவிலூர் தொகுதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News December 4, 2025

கள்ளக்குறிச்சி: நிறைவேறாத ஆசை – 94 வயது முதியவர் தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சோழம்பட்டைச் சேர்ந்தவர் சோலையாப்பிள்ளை (94). இவர் தனது மனைவி தனலெட்சுமியிடம் தனக்கு ஒரு இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு, தனலெட்சுமி மறுப்பு தெரிவித்து, உங்களுக்கு வயதாகிவிட்டது எனக் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 4, 2025

மெக்கானிக் கடையின் பூட்டை உடைத்து பைக் உதிரிபாகங்கள் திருட்டு

image

ஆவிகொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் திருக்கோவிலூரில் மெக்கானிக் கடை நடத்தி வருவதாகவும், கடந்த 29-ஆம் தேதி வழக்கம் போல் பணி முடிந்து கடையை பூட்டிவிட்டு மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டரை உடைத்து 35 ஆயிரம் மதிப்பிலான பைக் உதிரி பாகங்கள் திருடப்பட்டிருப்பது தொடர்பாக இன்று திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News December 4, 2025

கள்ளக்குறிச்சி: சிறுமி 5 மாதம் கர்ப்பம்.. கணவன் போக்சோவில் கைது!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது, அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்த நிலையில், கணவனை போக்சோவில் கைது செய்தனர் போலீசார்.

error: Content is protected !!