News June 7, 2024
ஜூலை முதல் வாரத்திற்குள் இடைத்தேர்தல் தேதி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஜூன் கடைசி அல்லது, ஜூலை முதல் வாரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது. திமுக MLA புகழேந்தி ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலுக்கும் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தேர்தல் ஆணையம் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
Similar News
News September 14, 2025
பசுவை விலங்காக கூட கருதுவதில்லை: மோடி

நாட்டில் விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் பசுவை விலங்காக கூட கருதுவதில்லை என PM மோடி கூறியுள்ளார். இதனை, விலங்குகள் மீதான ஆர்வலர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கறை என்றும் PM குறிப்பிட்டார். நாடு முழுவதும் தெருநாய்கள் விவகாரம் விவாதமாகியுள்ள நிலையில், மோடியின் இந்த பேச்சு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
News September 14, 2025
ஜீரண சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்!

உடலின் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் சீமை சாமந்தி தேநீர் உதவும்.
★சாமந்திப்பூ இதழ்களைப் பிரித்து நன்கு காய வைக்கவும்.
★1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 தேக்கரண்டி உலர்ந்த பூக்களை போடவும்.
★8- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
★அதை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கொஞ்சம் தேன் கலந்து கொண்டால், சத்தான சீமை சாமந்தி தேநீர் ரெடி. SHARE IT.
News September 14, 2025
7 மாவட்டங்களில் மழை தொடரும்: IMD

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட்ல சொல்லுங்க.