News June 27, 2024
இடைத்தேர்தல் புறக்கணிப்பு – நெல்லை முபாரக்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று(ஜூன் 26) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே அதிகாரிகள் நடவடிக்கை அமையும் என்பதால் இந்த இடைத்தேர்தலை எஸ்டிபிஐ கட்சி புறக்கணித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
நெல்லை ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

திருநெல்வேலி கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 24 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <
News October 15, 2025
நெல்லை: தீபாவளி வசூல் வேட்டை – போலீசார் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய அரசுத்துறைகளில் பரிசுப் பொருட்கள் மற்றும் வசூல் வேட்டை தவிர்க்க மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர். இது தொடர்பாக ரகசிய தகவல்களை திரட்டி வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு முக்கிய அரசு துறைகளை கண்காணித்து சோதனை நடத்தவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
News October 15, 2025
நெல்லையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (அக்.14) மேலப்பாளையத்தில் நடைபெற்ற வாராந்திர ஆட்டுச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குவிந்து ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் மொத்தம் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.