News May 23, 2024
2050க்குள் உலகில் பாதி பேருக்கு மையோபியா ஏற்படக்கூடும்

மையோபியா எனப்படும் கிட்டப்பார்வையால் இன்னும் 25 வருடத்திற்குள் உலகில் பாதி பேர் பாதிக்கப்படுவர் என ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கை வெளியில் போதுமான நேரத்தை செலவழிக்காததும், செல்ஃபோன்களை நீண்டநேரம் பார்ப்பதுமே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். கண்களின் சீரான வளர்ச்சிக்கு சூரிய வெளிச்சம் அவசியம், அதுவும் குழந்தைகளுக்கு நிச்சயம் தேவை என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
Similar News
News September 1, 2025
செப்டம்பர் 1: வரலாற்றில் இன்று

*1593 – ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் பிறந்தநாள்.
*1604 – சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதல்முறையாக வைக்கப்பட்டது.
*1939 – மாற்றுத்திறனாளிகள், மனநோயால் பாதிக்கப்பட்ட ஜெர்மானியர்களை கருணைக் கொலை செய்வதற்கு ஹிட்லர் ஒப்புதல் அளித்தார்.
*1979 – நாசாவின் Pioneer 11 ஆளில்லா விண்கலம், சனி கோளை 21,000 கி.மீ., தூரத்தில் அடைந்தது. *1980 – நடிகை கரீனா கபூர் பிறந்தநாள்.
News September 1, 2025
USA-க்கான அஞ்சல் சேவைகள் நிறுத்தம்

USA-வுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தப்படுவதாக India Post அறிவித்துள்ளது. USA-வுக்கு அஞ்சல்களை கொண்டு செல்வதில் சிக்கல் நிலவுவதால், கடிதங்கள், $100 வரை மதிப்பிலான பரிசுப் பொருட்கள் உள்பட அனைத்து வகை அஞ்சல்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஏற்கெனவே முன்பதிவு செய்து பொருள்களை அனுப்ப முடியாத வாடிக்கையாளர்கள், தபால் கட்டணத்தை திரும்பப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
MP-க்களுக்கு விருந்தளிக்கும் PM மோடி

செப்.9-ல் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கு முந்தைய நாளான செப்.8-ல் NDA கூட்டணி MP-க்களுக்கு PM மோடி இரவு விருந்து வைக்கவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையான பிணைப்புடன் செயல்படுவர் என்றும் கூறப்படுகிறது. இத்தேர்தலில் NDA கூட்டணி சார்பில் CP ராதாகிருஷ்ணனும், INDIA கூட்டணியில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.