News April 29, 2025
ஆபீசுக்கு வாங்க. இல்லனா வேலைய விட்டு போங்க…

வீட்டிலிருந்து பணி செய்பவர்களை அலுவலகத்திற்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்த தொடங்கியிருக்கிறது கூகுள் நிறுவனம். கொரோனா நேரத்தில் தற்காப்புக்காக ஊழியர்களுக்கு Work From Home அளித்தன IT நிறுவனங்கள். ஆனால், கொரோனா ஓய்ந்த பின்னரும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர மறுப்பதால், Hybrid Model கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி, பணியாளர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது அலுவலகத்திற்கு வர வேண்டும்.
Similar News
News December 2, 2025
உதகை படகு இல்லத்தில் தானியங்கி வாட்டர் ஏடிஎம்!

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வாட்டர் ஏ.டி.எம் இயந்திரம் திறக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ திறந்து வைத்து, அதன் செயல்பாட்டையும் பார்வையிட்டார்.
News December 2, 2025
இந்தியாவின் பிரம்மாண்ட கோட்டைகள் PHOTOS

இந்தியாவில் உள்ள பிரம்மாண்ட கோட்டைகள் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை சுமந்து நிற்கின்றன. எதிரிகள் நுழைய முடியாத வகையில், சாம்ராஜியத்தை பாதுகாக்க மன்னர்கள் கோட்டைகளை கட்டியுள்ளனர். இந்த கோட்டைகள் நூற்றாண்டுகள் கடந்து இன்றும் கம்பீரமாக நிற்கின்றன. மேலே, உங்களுக்காக சில பிரம்மாண்டமான கோட்டைகளை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 2, 2025
58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.


