News April 29, 2025
அட்சய திருதியை நாளில் 5 பொருள்களை வாங்குங்கள்

அட்சய திருதியை நாளை (ஏப்.29) மாலை 5:31-க்கு தொடங்கி ஏப்.30-ம் தேதி பிற்பகல் 2:12-க்கு நிறைவடையும். இந்த நாளில் தானம் செய்வது, பொருள் வாங்குவது, வழிபாடு உள்ளிட்ட செயல்களை மேற்கொள்வது நற்பலன்கள் தரும் என்பது நம்பிக்கை. தங்கம் வாங்குவது மங்களகரமான தொடக்கமாக கருதப்பட்டாலும், நவதானியங்கள், மண்குடம், பித்தளை-செம்பு பாத்திரங்கள், மஞ்சள், புத்தகங்கள், உப்பு போன்றவற்றையும் வாங்கலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News November 25, 2025
விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த மாதம் 28ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் காலை 11 மணிக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் விவசாயிகள் தங்கள் குறைகளை நேரடியாக சொல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கூட்டத்தில் விவசாயிகளை நேரில் சந்திக்கிறார்.
News November 25, 2025
இந்த நாள்களில் மிக மிக கவனம் மக்களே!

காரைக்கால், திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களுக்கு நவ.28-ல் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவ.29-ல் திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, கடலூருக்கு ஆரஞ்சு அலர்ட், டிச.1-ல் திருவள்ளூருக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நவ.26, 27 ஆகிய 2 நாள்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது குறிபிடத்தக்கது.
News November 25, 2025
ராமர் கோயிலில் பிரம்மாண்ட கொடியேற்று விழா

ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று கொடியேற்றும் விழா நடைபெற உள்ளது. PM மோடி இவ்விழாவில் பங்கேற்று, கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் காவிக் கொடி ஏற்றி வைக்கிறார். இதற்காக ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.


