News October 12, 2025

Business Roundup: பங்கு வர்த்தக செயலிகளுக்கு தனிக்குறியீடு

image

*நாட்டில் சிறுகடன் தொகை ₹3.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக சிறுநிதி வங்கிகளின் ஒழுங்குமுறை அமைப்பான சா-தன் (Sa-Dhan) அறிவித்துள்ளது. *போலி பங்கு வர்த்தக செயலிகளால் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க, கூகுளிடம் பங்கு வர்த்தக செயலிகளுக்கு தனிக்குறீயிடு கேட்டுள்ளது செபி. *செப்டம்பரில் பரஸ்பர நிதி முதலீட்டு தொகை 4% வளர்ச்சி பெற்றுள்ளதாக இந்திய பரஸ்பர நிதி சங்கம் அறிவிப்பு.

Similar News

News March 4, 2026

பட்டாசை வெடிக்கும் நியூசிலாந்து

image

T20 WC அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து அபாரமாக விளையாடி வருகிறது. 170 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் நியூசிலாந்து அணி, 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. டிம் சீஃபர்ட் அரைசதம் விளாசி ரபாடா பந்தில் கிளின் போல்ட் ஆனார். ஆலன் அரைசதத்தை கடந்து களத்தில் உள்ளார். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் சிக்ஸரும், பவுண்டரிகளும் பறந்தன.

News March 4, 2026

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பு.. பாமகவுக்கு 1 சீட்

image

ராஜ்யசபா அதிமுக வேட்பாளராக தம்பிதுரை போட்டியிடுவார் என EPS அறிவித்துள்ளார். அதேபோல், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நாளையுடன் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடையவுள்ள நிலையில், <<19299051>>திமுக<<>>, அதிமுக அடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

News March 4, 2026

மகளிர் தினத்தில் வெளியாகும் தவெக தேர்தல் அறிக்கை?

image

தமிழக தேர்தல் களத்தில் திமுக, அதிமுக உள்ளிட்டவை தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தனித்து களம் காணும் விஜய்யின் தவெக, அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது. அதன்படி சர்வதேச மகளிர் தினமான வரும் மார்ச் 8-ம் தேதி தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட உள்ளாராம். அதில் மகளிரை குறிவைத்து பல திட்டங்கள் இருக்கும் என சொல்லப்படும் நிலையில், நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

error: Content is protected !!