News October 14, 2025
Bussiness Roundup: தமிழகத்தில் வெள்ளிக்கு தட்டுப்பாடு

*வாரத்தின் முதல் நாளான நேற்று, இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன. *அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ₹88.67 ஆனது. *நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி 14 லட்சம் கிலோ குறைந்துள்ளது. *அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த, இந்திய அதிகாரிகள் குழு இந்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளது. *தமிழகத்தில் வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
உங்களின் சாய்ஸ் எது?

சீனியர் ஹீரோக்கள் இல்லாமல் இந்த வருடம் தீபாவளி ட்ரீட்டாக பிரதீப் ரங்கநாதனின் ‘டூட்’, துருவ் விக்ரமின் ‘பைசன்’, ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ ஆகிய 3 படங்கள் வெளியாக உள்ளன. இந்த 3 படங்கள் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், 3 படங்களின் டிரெய்லர்களும் வெளிவந்துவிட்டன. இவற்றில், உங்களின் ஆர்வத்தை தூண்டிய படம் எது.. கமெண்ட் பண்ணுங்க?
News October 14, 2025
BREAKING: அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு

மணல் குவாரி மோதல் வழக்கில் இருந்து அமைச்சர் சிவசங்கர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆவினன்குடியில் சிவசங்கர் தலைமையில் 2015-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். மேலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக சிவசங்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் சிவசங்கர் உள்ளிட்ட 27 பேரை விடுவித்து கடலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News October 14, 2025
பெண்களுக்கு எதிராக திராவிட மாடல்: வானதி

திராவிட மாடல் ஆட்சி என்பது முழுவதும் பெண்களுக்கு எதிரான மாடலாக உள்ளது என்று வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். குடும்பத்தில் கூட ஆண் வாரிசுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெண்களுக்கு கொடுக்காததுதான், திராவிட மாடல் அரசாக பார்க்கிறோம். பெண்ணுரிமை பேசுகின்றன ஆட்சியில்தான் அதிகமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக திமுகவை கடுமையாக விமர்சித்தார்.