News November 6, 2025
Business Roundup: அனில் அம்பானிக்கு ED சம்மன்

*இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன *வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராக அனில் அம்பானிக்கு ED சம்மன் *₹4 கோடி வருமான வரித்துறை வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சாதகமான தீர்ப்பு *பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு வங்கிகள் சங்கம் கண்டனம் *வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் மின்விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
நாளையுடன் முடிகிறது… உடனே இதை பண்ணுங்க

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை அப்லோடு செய்ய நாளையே(நவ.7) கடைசி நாள் என TNPSC தெரிவித்துள்ளது. நாளை சான்றிதழ்களை அப்லோடு செய்யாதவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல பரிசீலிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.<
News November 6, 2025
டி20ல் வாஷிங்டன் சுந்தர் புதிய சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி வாஷிங்டன் சுந்தர் அசத்தினார். இந்நிலையில், சர்வதேச டி20-யில் 50 விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையையும் சுந்தர் பெற்றுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய அவர், இந்த போட்டியில் பவுலிங்கில் கலக்கியுள்ளார். இதன்மூலம் 3 ஃபார்மட்டிலும் தடம் பதிக்கும் ஆல்ரவுண்டராக வாஷி உருவாகி வருகிறார்.
News November 6, 2025
30 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த அக்டோபர் 9-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 30 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், 30 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அபராத தொகையாக தலா ₹2.50 லட்சம் செலுத்தினால் உடனடியாக விடுதலை ஆகலாம் என்றும், இல்லையென்றால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.


