News April 21, 2024

60 வயதில் தொழில், ₹2,100 கோடிக்கு விற்பனை

image

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பிஸ்க் பார்மை, கிருஷ்ணதாஸ் பால் என்பவர் தன்னுடைய 60ஆவது வயதில், 2000இல் தொடங்கினார். 4 ஆண்டுகளில் ₹15 கோடி இழப்பு ஏற்பட்டும் மனம் தளரவில்லை. இதனால் 2008இல் ₹200 கோடி, 2021இல் ₹1,250 கோடி, 2023இல் ₹2,100 கோடி என விற்பனை செய்தது. ஆனால் இதனைக் காண பால் இல்லை. 2020இல் பால் காலமானார். அவரின் மகன் அந்த நிறுவனத்தை தற்போது நடத்துகிறார்.

Similar News

News November 12, 2025

ஸ்டாலின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள்: நிர்மலா

image

மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். SIR-க்கு எதிராக திமுக போராட்டம் நடத்துவது ஆச்சரியம் அளிக்கிறது எனக் கூறிய அவர், SIR என்றால் என்ன என்றே தெரியாமல் உதயநிதி ‘ரிவிஷன்’ என்பதை ‘ரெஸ்ட்ரிக்‌ஷன்’ என சொல்வதாக விமர்சித்தார். மேலும், தங்களின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க திமுக, இதுபோன்ற நிலைப்பட்டை எடுப்பதாக சாடினார்.

News November 12, 2025

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $23.64 உயர்ந்து $4,137-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. நேற்று (நவ.11) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 அதிகரித்து, ₹93,600 -க்கு விற்பனையானது. SHARE.

News November 12, 2025

கூண்டோடு கட்சியில் இணைந்தனர்

image

கடந்த செப்டம்பரில் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ (NMMK) என்ற புதிய கட்சியை தொடங்கி மாநிலம் முழுவதும் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில், 1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் NMMK-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன்பின் பி.எல்.ஏ.ஜெகநாத் பேசுகையில், ஒத்த கருத்துடைய கட்சியுடன் இணைந்து 2026 தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார்.

error: Content is protected !!