News April 9, 2024
திமுகவிற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு

வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவிற்கு பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த விக்கிரமராஜா, தங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்ததற்கு நன்றி கூறி, I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவும் தெரிவித்தார்.
Similar News
News February 3, 2026
பிப்ரவரி 3: வரலாற்றில் இன்று

*1900 – வேதியியலாளர் டி.ஆர்.சேஷாத்ரி பிறந்தநாள் *1900 – தமிழ்ப் புலவர் எ.ஆ.கிருட்டிணப் பிள்ளை நினைவு நாள் *1963 – பொருளியல் அறிஞர் ரகுராம் ராஜன் பிறந்தநாள் *1969 – மறைந்த முதல்வர் அண்ணாதுரை நினைவு நாள் *1983 – நடிகர் சிலம்பரசன் பிறந்தநாள் *1998 – இலங்கை, தம்பலகாமம் என்ற கிராமத்தில் சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்கள் சுட்டுக் கொலை
News February 3, 2026
தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

நள்ளிரவு முதல் பயண உடைமைக்களுக்கான புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வெளிநாட்டில் ஓராண்டுக்கு மேல் தங்கியிருந்து வசித்துவிட்டு வான்வழியாகவோ அல்லது கடல் மார்க்கமாகவோ இந்தியா திரும்பும் பெண்கள் 40 கிராமும், ஆண்கள் 20 கிராமும் ஆபரண தங்கத்தை சுங்க வரியின்றி கொண்டுவர அனுமதிக்கப்படுவர். அதேபோல, ₹75,000 வரையிலான பொருள்களுக்கு சுங்க வரி கிடையாது.
News February 3, 2026
பிரபல தமிழ் பாடகியின் பரிதாப நிலை

‘ஈசன்’-ல் இடம்பெற்ற ஜில்லா விட்டு ஜில்லா பாடல் மூலம் பிரபலமானவர் தஞ்சை செல்வி. 2 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு முடக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சொல்லில் அடங்கா துயரங்களை சந்தித்து மீண்டு வந்திருந்தாலும், தற்போது வாய்ப்புகள் இன்றி தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். வீட்டு வாடகை கூட கட்டமுடியாமல் சிரமப்படுவதாக கூறும் அவர், சிறு கட்சேரி வாய்ப்புகள் கிடைத்தால் பிழைப்பு நடத்திக் கொள்வேன் என உதவி கேட்டுள்ளார்.


