News December 4, 2025

Business 360°: சேவைத்துறை வளர்ச்சி அதிகரிப்பு

image

*கடந்த நவம்பரில், நாட்டின் சேவைத்துறை 59.8 புள்ளிகளை பெற்று வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் *பூஷான் பவர்ஸ் நிறுவனத்தில் ஜப்பானின் ஜே.எப்.இ ஸ்டீல்ஸ் நிறுவனம் ₹15,750 கோடி முதலீடு *இந்தியாவில் 5 லட்சம் கார்களை விற்றுள்ளதாக ஸ்கோடா அறிவிப்பு *ரிலையன்ஸின் எண்ணெய் நிறுவனமான நயாரா, கடந்த நவம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்கியுள்ளது.

Similar News

News December 4, 2025

தருமபுரி: மின்சாரம் தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

image

தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே தாளப்பள்ளத்தில் உள்ள காகித ஆலையின் திறப்பு விழாவில் சுவிட்ச் பெட்டிக்கு அலங்காரம் செய்தபோது பாஞ்சாலை (52) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும், மாரண்டஅள்ளி அருகே மோட்டார் சுவிட்சை இயக்க முயன்றபோது நாராயணன் (37) என்பவரும் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தனித்தனியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 4, 2025

மக்களை திருத்தவே முடியாது: தமிழருவி மணியன்

image

இனி காமராஜர் மக்கள் கட்சியை நடத்துவதில் பயனில்லை என தமிழருவி மணியன் பேசியுள்ளார். எந்த கைமாறும் இல்லாமல் 16 ஆண்டுகள் கட்சி நடத்தியதாக கூறிய அவர், மக்களிடம் மாற்றம் வராததால் கட்சியை கலைத்து, தன்னுடன் இருந்தவர்களை தமாகாவில் சேர்த்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், பணம் எதுவும் வாங்காமல் ஓட்டு போடும் நிலையில் இப்போது மக்கள் இல்லை எனவும் இது திருத்தவே முடியாத சமூகம் என்றும் அவர் கொந்தளித்துள்ளார்.

News December 4, 2025

BREAKING: 12 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு.. வந்தது Alert

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், கோவை, ஈரோடு, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். எனவே, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்.

error: Content is protected !!