News April 16, 2024

பேருந்து கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி

image

ஒடிசா அருகே சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி ஐவரை பலி வாங்கியிருக்கிறது. கட்டாக் நகரிலிருந்து மேற்குவங்கம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, பராபதி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 38க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 27, 2025

விவசாயிகளுக்கு ₹31,500 மானியம் வழங்கும் அரசு திட்டம்!

image

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ₹31,500 வரை மானியம் என 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு, குறைந்தது 1 முதல் 5 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும். இயற்கை விவசாயத்துக்கு மாற விரும்புபவர்கள் <>pgsindia-ncof.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பித்து மானியத்தை பெறலாம். SHARE.

News November 27, 2025

அடுத்த தலைவர் தவெகவில் இணைந்தார்

image

செங்கோட்டையனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த Ex MLA-வும், பாஜக நிர்வாகியுமான வெங்கடாஜலம் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் MLA, மா.செ.,வாக இருந்த இவர், 2023-ல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது அங்கிருந்து விலகி தவெகவுக்கு தாவியுள்ளார். KAS கட்சியில் இணையும் நிகழ்ச்சியில்தான் இவரும் இணைந்தார். எனவே, இவரையும் செங்கோட்டையன் தான் தவெகவுக்கு அழைத்து சென்றாரா என கேள்வி எழுந்துள்ளது.

News November 27, 2025

₹48,000 சம்பளம்.. 750 பணியிடங்கள்: APPLY

image

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் காலியாகவுள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: டிகிரியுடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 20 – 30. சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.1. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!