News August 4, 2025
மின்கட்டணம் போல் பேருந்து கட்டணமும் உயரும்: அன்புமணி

பணவீக்கத்திற்கு ஏற்ப தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த TN அரசு அனுமதி வழங்கயிருப்பதாக
அன்புமணி தெரிவித்துள்ளார். இதனால் மின்கட்டணம் போன்று வருடந்தோறும் பேருந்துக் கட்டணமும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். திமுகவின் அதிகார மையங்களை சேர்ந்தவர்கள் ஏராளமான தனியார் பேருந்தின் வழித்தட உரிமைகளை வாங்கியுள்ளதாக வரும் குற்றச்சாட்டுகளை இணைத்தே இந்த முடிவை பார்க்க வேண்டிவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News August 4, 2025
தொழில் தொடங்க ₹25 லட்சம் கடன் வேணுமா?

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு சிறுதொழில் தொடங்க பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) தனிநபர் கடன்கள் வழங்குகிறது. வட்டி: 7-8% மட்டுமே. பயனாளியின் பங்கு 5% ஆகும். ஆண்டு வருமானம் ₹3 லட்சத்துக்குள் இருப்போர் (குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: www.tabcedco.tn.gov.in -ஐ அணுகவும்.
News August 4, 2025
சிராஜின் சீக்ரெட்… உன்னை நம்பு!

சிராஜின் அசத்தல் பவுலிங் தான் இன்று டீம் இந்தியாவின் வெற்றியை சாத்தியமாக்கியது. அதுபற்றி சிராஜ் சொல்வதை கேளுங்கள். ‘இன்று காலை வழக்கத்தைவிட 2 மணிநேரம் முன்பே எழுந்துவிட்டேன். பின், என் போனில் ‘BELIEVE’ என்ற வாசகம் கொண்ட ரொனால்டோவின் வால்பேப்பரை வைத்தேன். ‘என் நாட்டுக்காக நான் இதை செய்துமுடிப்பேன்’ என்று அப்போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்’ என்றார். BELIEVE YOURSELF!
News August 4, 2025
OPS கூட்டணிக்கு வரலாம்: நயினார் அறிவிப்பு

PM மோடியை சந்திக்க நேரம் ஒதுக்காததால் NDA கூட்டணியில் இருந்து வெளியேறினார் OPS. அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக, டிடிவி தரப்பினர் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பேட்டியளித்த நயினாரிடம், கூட்டணிக்கு OPS வந்தால் ஏற்பீர்களா என கேட்டதற்கு, யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் என்றார். இதனால் ஓபிஎஸ்-க்கான கூட்டணி கதவு திறந்தே உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.