News February 10, 2025
ஆகா கானின் உடல் அடக்கம்

பிரபல ஆன்மிக தலைவரும், ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் 49வது இமாமுமான ஆகா கானின் (88) உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 5ம் தேதி உயிரிழந்த நிலையில், நேற்று இரவு எகிப்தின் அஸ்வானில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆகா கான் மேம்பாட்டு நெட்வொர்க் (AKDN) சுகாதாரம், கல்வி போன்ற பல்வேறு உதவிகளை 30க்கும் மேற்பட்ட நாடுகளில் செய்துள்ளது. அவரது சேவைகளுக்காக 2015ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
Similar News
News March 3, 2026
ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரும் படுகொலை

இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் ஏவுகணை தாக்குதலில் ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரான சையத் மஜீத் எப் அல்-ரேசாவும் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல், US-ன் நடத்திய முதல்நாள் தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் <<19266093>>அமீர் நசீர்சாதே கொல்லப்பட்டார்<<>>. இதனையடுத்து பதவியேற்ற மறுநாளிலேயே சையத் மஜீத் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ஈரான் அரசு இதனை இன்னும் உறுதிபடுத்தவில்லை.
News March 3, 2026
சங்கீதா விவாகரத்தில் ட்விஸ்ட்.. மொத்தமாக மாறுகிறது

விஜய் – சங்கீதா விவாகரத்து செய்தி தமிழகத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. சங்கீதாவுடன் விஜய் தரப்பு சமரசப் பேச்சு நடத்தி வருவதாக இன்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், விஜய்யின் சமரசத்தை ஏற்று சங்கீதாவும் விவாகரத்து மனுவை வாபஸ் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக இருதரப்பினரிடம் இருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போதுவரை வெளியாகவில்லை.
News March 3, 2026
இன்று சந்திர கிரகணம்: தம்பதியர் ஒன்று சேரலாமா!

சந்திர கிரகணத்துக்கு முன்பு 9 மணிநேரமும், கிரகணத்தின் போதும் பூமியின் சூழல் அசுத்தமாவதாக இந்துமத நம்பிக்கை கூறுகிறது. இந்நேரத்தில் பல்வேறு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வகையில், தம்பதியர் உறவில் ஈடுபடுவதையும் கிரகணம் முடியும்வரை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.


