News June 25, 2024
முன்னாள் மத்திய அமைச்சரின் வீட்டில் திருட்டு

முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சின்னம்மாபுரம் மினிகாடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த இரும்பு மேஜை டிராயரில் இருந்து ₹50 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
இம்ரான் உயிருடன் இருப்பதை உறுதி செய்த சகோதரி

சிறையில் உள்ள பாகிஸ்தான் Ex. PM இம்ரான்கான் கொல்லப்பட்டதாக சந்தேகித்து அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில், இம்ரான்கானை அவரது சகோதரி உஸ்மா நேரில் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை இன்று சந்தித்து 20 நிமிடங்கள் உஸ்மா பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இம்ரான் உயிருடன் இருக்கிறார், ஆனால் மனதளவில் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
News December 2, 2025
டெல்லி விரைந்த OPS… புதுக்கட்சி தொடக்கமா?

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க EPS-க்கு 15-ம் தேதி வரை OPS கெடு விதித்திருந்தார். இதனிடையே அவர் தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது தவெகவுடன் இணைவாரா என்ற கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் டெல்லிக்கு இன்று OPS அவசர பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதுவரை பாஜக தலைவர்களை சந்திக்க அவர் நேரம் எதுவும் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் புதிய கட்சியை பதிவு செய்யவே டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
News December 2, 2025
5 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

தொடர் மழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(டிச.3) பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூரில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், பல மாவட்டங்களில் மழை தொடர்வதால், அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே, தி.மலை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது.


