News August 17, 2025
BCCIக்கு பும்ரா எழுதிய முக்கிய கடிதம்!

செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட்டு விடும். ரசிகர்களிடையே பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் நீடிக்கும் நிலையில், அவர் BCCI-க்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதில், ஆசிய கோப்பை தொடரில் விளையாட பும்ரா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிய கோப்பைக்கான பெஸ்ட் பிளேயிங் XI-ஐ கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News March 10, 2026
சாதி, மதம் பார்த்து ஓட்டு போடாதீங்க: துரை வைகோ

சாதி, மதப் பெருமைகளை பேசுவதாலும், இன்னொரு சாதியை திட்டுவதாலும் எந்த பயனும் கிடையாது என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். சாதி, மதங்களை கடந்தும், அரசியல் வேறுபாடுகளை கடந்தும் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், சாதி, மதம் பார்ப்பது மதிமுக வேட்பாளராக இருந்தாலும் அவருக்கு ஓட்டுப் போடாதீங்க; நல்ல தலைவர்களைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
துடிக்க துடிக்க கொலை செய்த இளம் நடிகை.. PHOTO

விழுப்புரத்தில் குறும்பட இயக்குநர் ஜெயக்குமார் என்பவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்திற்கு வற்புறுத்தியதால் இளம் நடிகை பூஜா தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து, ஜெயக்குமாரை துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பூஜா மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
News March 10, 2026
349 பணியிடங்கள், ₹57,000 சம்பளம்.. Apply பண்ணுங்க

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <


