News April 19, 2024

ஆட்டநாயகன் விருதை வென்ற பும்ரா

image

நேரம் குறைவு, இம்பேக்ட் வீரர் விதிமுறை போன்ற காரணங்களால் டி20 போட்டிகள் பவுலர்களுக்கு கடினமாக மாறியுள்ளதாக MI அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பின் பேசிய அவர், “டி20 கிரிக்கெட் போட்டியில், பந்து 2 ஓவர்களிலேயே ஸ்விங் ஆகும். பேட்டிங் வரிசையும் ஆழமாகியுள்ளது. நான் அதிகமாக பந்து வீச விரும்புபவன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் பிடிக்கும்” என்றார்.

Similar News

News January 20, 2026

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று ஸ்டிரைக்

image

சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். காலமுறை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

News January 20, 2026

சென்னை வந்தடைந்தார் விஜய்!

image

2-வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்ற தவெக தலைவர் விஜய் நள்ளிரவு சென்னை திரும்பினார். கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு நேரில் ஆஜராகி, அவர்களது கேள்விகளுக்கான விளக்கங்களை அளித்தார். விசாரணை முடிவடைந்ததை அடுத்து, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். அவருடன் தவெக நிர்வாகிகளான நிர்மல் குமார் உள்ளிட்டோரும் வந்தனர்.

News January 20, 2026

உடல் எடையை குறைக்க யூடியூப் டிப்ஸ்.. மாணவி உயிரிழப்பு

image

மதுரையில் யூடியூப் வீடியோக்களை பார்த்து, உடல் எடையை குறைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார். கடந்த 17-ம் தேதி நாட்டு மருந்து சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுள்ளார். மீண்டும் 18-ம் தேதி வாந்தி, மயக்கம் ஏற்பட, ஹாஸ்பிடல் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!