News January 6, 2025
இங்கிலாந்து தொடரில் பும்ராவிற்கு ஓய்வு?

BGT கடைசி டெஸ்டில் பும்ரா காயமடைந்து பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு முதுகு தசை பிடிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில்தான், வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 5 T20, 3 ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. பும்ரா இல்லாதது என்ன மாற்றத்தை அணிக்கு கொடுக்கும்.
Similar News
News January 15, 2026
NIA-க்கு புதிய தலைவர் நியமனம்!

NIA-ன் தலைவராக மூத்த IPS அதிகாரி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 1994 இமாச்சல பிரதேச கேடர் IPS அதிகாரியான இவர், கடந்த ஆண்டு டிசம்பரில் NIA-ன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது, முழுநேர தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவர் பணி ஓய்வுபெறும் ஆக.31, 2028 வரை இந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News January 15, 2026
கனவில் கேட்ட ஆண்டாள்.. 45 சவரனை கொடுத்த பெண்!

நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை தரிசித்தவர்கள், ‘நகைகள் புதுசா இருக்கே’ என கவனித்திருக்கலாம். இதற்கு ஒரு பெண்ணின் பக்தியே காரணம். சிவகாசியை சேர்ந்த ஜோதிலட்சுமியின் கனவில் தோன்றி ஆண்டாள், ‘உன் நகைகளை தா’ என கேட்டாராம். கொஞ்சமும் யோசிக்காத ஜோதிலட்சுமி 45 சவரன் நகைகளை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்க, அதை கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அந்த நகைகளை அணிந்தபடி, ஆண்டாள் உற்சவத்திற்கு புறப்பட்டுள்ளார்.
News January 15, 2026
கோர ரயில் விபத்தில் 32 பேர் பலி.. 7 பேர் கவலைக்கிடம்

தாய்லாந்து ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 66 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். அதில், 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நேற்று காலை, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானிக்கு சென்ற <<18853608>>ரயில் மீது கிரேன் விழுந்ததில்<<>> பெரும் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


