News December 28, 2024
கான்ஸ்டாஸ் சவாலை ஏற்ற பும்ரா

வித்தியாசமான சவால்களை எப்போதும் விரும்புவதாக பும்ரா தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்ஸின் முதல் 2 ஓவர்களில், 6-7 முறை கான்ஸ்டாஸ் விக்கெட் கிடைப்பது போன்ற சூழல் இருந்ததாகவும், ஆனால், கிரிக்கெட்டில் சில நேரங்களில் இப்படி நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, பும்ராவை தொடர்ந்து டார்கெட் செய்வேன் எனவும், 2ஆவது இன்னிங்ஸிலும் அவரது பவுலிங்கில் அதிரடி காட்டுவேன் எனவும் கான்ஸ்டாஸ் தெரிவித்தார்.
Similar News
News March 7, 2026
விலை மொத்தமாக சரிந்தது.. கிலோ ₹5 மட்டுமே

வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில், தொடர் சரிவில் இருந்த தக்காளி இன்று 1 கிலோ வெறும் ₹5-க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம்(₹25), உருளைக் கிழங்கு(₹20), சுரைக்காய்(₹20) உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. இதேபோல், கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் விலை சரிந்துள்ளது. உங்க ஊரில் விலை எப்படி உள்ளது?
News March 7, 2026
BREAKING: விவாகரத்து சர்ச்சை.. விஜய்க்கு ஆதரவு

சங்கீதா விவாகரத்து விவகாரம் தமிழக அரசியல் களத்திலும் எதிரொலித்துள்ளது. விஜய்க்கு எதிராக SM-ல் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். விவாகரத்து விவகாரம் மூலம் விஜய்யின் இமேஜை கெடுக்க திமுக முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுகவை சிறுமைப்படுத்த முயன்றது போலவே, விஜய் விவகாரத்திலும் திமுக முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார்.
News March 7, 2026
விஜய் மீண்டும் நடிப்பதே நல்லது: பாடகர் ஸ்ரீநிவாஸ்

விஜய் அரசியலில் நுழைந்தபோது புதுமையை வழங்குவார் என எதிர்பார்த்தேன்; ஆனால், தற்போது விஜய் முதலில் செய்ய வேண்டியது சொந்த பிரச்னையில் கவனம் செலுத்தி தீர்வுகான வேண்டும் என்பதுதான் என பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக வேண்டும் என்றால் தொலைநோக்கு திட்டங்கள் இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், விஜய் மீண்டும் நடிப்பை தொடர்வதே சிறந்தது எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.


