News December 5, 2024
ICC சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பும்ரா

ICC-யின் நவம்பர் மாத சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பும்ரா பெயர் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ICC கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ICC அறிவித்துள்ளது. வீரர்கள் பட்டியலில் பும்ரா, PAK வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப், மற்றும் SA ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சன் இடம் பெற்றுள்ளனர்.
Similar News
News December 24, 2025
1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. விரைவில் மற்றவர்களுக்கும் அறிவிப்பு ஆணை வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். மேலும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
News December 24, 2025
வாழ்வாதாரத்தை காக்க போராடும் விவசாயிகள் : CM

MGNREGA திட்டம் மாற்றியமைக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் MGNREGA திட்டத்தை மீட்டெடுக்க 389 இடங்களில் ஏழை விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது TN-ல் இருந்து ஒலிக்கும், ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை பாஜக உணர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 24, 2025
பொங்கல் பரிசாக ₹5,000.. அமைச்சர் HAPPY NEWS

பொங்கல் பரிசுத் தொகை குறித்த தமிழக அரசின் அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். EPS கோரிக்கையை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், இதுகுறித்து CM ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். அதனால், விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.


