News April 23, 2025
பும்ரா, மந்தனாவுக்கு இங்கிலாந்தில் கௌரவம்..!

‘கிரிக்கெட் உலகின் பைபிள்’ எனப்படும் லண்டனில் வெளியாகும் விஸ்டன் புத்தகம் ஆண்டுதோறும் 5 வீரர்களை தேர்வு செய்து கௌரவிப்பது வழக்கம். இந்தாண்டு அந்த பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பும்ரா டெஸ்டில் கடந்த ஆண்டு 71 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மந்தனா கடந்த ஒரே ஆண்டில் 1,659 ரன்கள் குவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
பெண்களுக்கு நார்மல் பிரசவம் நடப்பது இப்படிதான் (PHOTOS)

ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் உச்சபட்ச ஆசையும் நார்மல் டெலிவரி காண்பதே. பொதுவாக, 37 வாரங்களுக்கு பிறகு எந்த நேரத்திலும் பிரசவ வலி தொடங்கலாம். நீங்கள் எதிர்பார்த்தபடி இயற்கையாக வலி வந்தாலும் சரி, அல்லது மருத்துவ தலையீடு மூலம் வலி தூண்டப்பட்டாலும் சரி, நார்மல் டெலிவரி வெற்றியடைய சில முக்கிய அம்சங்கள் சரியான முறையில் அமைய வேண்டியது அவசியம். அவை என்னென்ன என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க…
News November 23, 2025
BREAKING: விஜய் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்

காஞ்சி நிகழ்ச்சியில், தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெறப்போகும் சில அறிவிப்புகளை விஜய் வெளியிட்டுள்ளார். அதன்படி, *தவெக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு நிரந்தர வீடு *ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் இருக்க வேண்டும் என்பது லட்சியம் *வீட்டிலும் ஒருவருக்கு நிரந்தர வருமானம் *ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு கட்டாய பட்டப்படிப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளார்.
News November 23, 2025
திமுக மீது வன்மம் இல்லை: விஜய்

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் எம்ஜிஆர் பாடலுடன் விஜய் தனது பேச்சை தொடங்கினார். அப்போது, திமுகவினருடன் தவெகவினருக்கு தனிப்பட்ட முறையில் எந்த வன்மமும் இல்லை. ஆனால், திமுகவினருக்கு வேண்டுமானால் தவெக மீது தனிப்பட்ட வன்மம் இருக்கலாம் என்று சாடினார். மேலும், கொள்கை என்றால் என்ன விலை என்று கேட்கும் திமுகவின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான் என்று விமர்சித்தார்.


