News December 25, 2024

டெஸ்ட் உலகின் நம்பர் 1 ஆன பும்ரா

image

ICC டெஸ்ட் பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா முதல் இடம் பிடித்துள்ளார். 904 புள்ளிகளுடன் அஸ்வினின் முந்தைய சாதனையை அவர் சமன் செய்துள்ளார். டாப் 10 பட்டியலில் அஸ்வின் 5, ஜடேஜா 10ஆம் இடங்களை பிடித்துள்ளனர். பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால் (5) மட்டும் டாப் 10ல் இடம்பெற்றுள்ளார். அணிகளின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.

Similar News

News September 11, 2025

வெண்மேகமே பெண்ணாக உருவான மீனாட்சி சவுத்ரி

image

மீனாட்சி சவுத்ரியின் சமீபத்திய இன்ஸ்டா புகைப்படங்களை பார்த்து வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடலை ரசிகர்கள் ரிபீட் மோடில் உருகி உருகி பாடி வருகின்றனர். அவரிடம் மனதை பறிகொடுத்த ரசிகர்கள் இவ்வருடம் உலக அழகி போட்டியெல்லாம் நடத்த தேவையில்லை என்கின்றனர். இதுவரை 2 தமிழ் படங்களில் மட்டுமே மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இனி அவர், அதிக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோள்.

News September 11, 2025

UAEக்கு எதிராக பும்ரா ஆடணுமா? அஜய் ஜடேஜா

image

UAE-க்கு எதிரான போட்டியில் பும்ரா தேர்வு செய்யப்பட்டதை அஜய் ஜடேஜா விமர்சித்துள்ளார். எப்போதும் பும்ராவை பதுக்கும் நீங்கள் UAE-க்கு எதிராக அவரை ஆட வைக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளார். பும்ரா காயமடைவதை தவிர்க்க விரும்பினால் இதுபோன்ற போட்டிகளில் ஆட வைக்காதீர்கள் அல்லது அவரை பாதுகாக்காதீர் என்று கூறினார். இங்கி. எதிரான முக்கியமான தொடரில் பும்ரா 3 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடினார்.

News September 11, 2025

செப்டம்பர் 11: வரலாற்றில் இன்று

image

*1803 – டெல்லியில் பிரிட்டிஷ் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் 2-ம் ஆங்கிலேய மராத்திய போர். *1921 – சுப்பிரமணிய பாரதி மறைந்த நாள். *1957 – இம்மானுவேல் சேகரன் மறைந்த நாள். *1982 – ஷ்ரேயா பிறந்தநாள். *2001 – நியூயார்க் உலக வர்த்தக மையம், பென்டகன் மீது அல்-கொய்தா நடத்திய தாக்குதல்களில் 2,974 பேர் கொலை. *2012 – பாகிஸ்தானில் ஆடை தொழிற்சாலைகளில் நிகழ்ந்த தீ விபத்தில் 315 பேர் உயிரிழப்பு.

error: Content is protected !!