News August 20, 2024

இ-சேவை மூலம் கட்டட சுய சான்று

image

இ-சேவை மையங்கள் மூலம் சுய சான்றிதழ் கட்டட அனுமதி வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. இணையதளம் மூலம் பொதுமக்களே சுய சான்று அனுமதி பெறலாம். எனினும், ஏதாவது தவறு நடந்துவிடும் என்ற அச்சத்தால், இன்ஜினியர்கள் மூலம் மக்கள் விண்ணப்பம் செய்கின்றனர். அவர்கள் அரசு கட்டணத்தை விட, கூடுதலாக ₹40,000 வரை கேட்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, 3ம் நபர் தலையீட்டை தடுக்க இ-சேவை மூலம் சான்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 6, 2026

BREAKING: கவர்னர் RN ரவி மாற்றம்!

image

தமிழக கவர்னராக இருந்த RN ரவி மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ஆளுநராக இருந்த <<19306734>>ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா<<>> செய்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

News March 6, 2026

PhonePe-ல் பயோமெட்ரிக் முறை

image

UPI பேமெண்ட்க்கு பயோமெட்ரிக் முறையை PhonePe அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை PIN மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில், இனி Fingerprint அல்லது Face recognition வைத்து பேமெண்ட் செய்யலாம். இந்த பயோமெட்ரிக் முறை ₹5000 வரை பரிவர்த்தனைக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. உங்களிடம் PhonePe செயலி இருந்தால் உள்ளே சென்று பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி பாருங்க.

News March 6, 2026

சஞ்சு சாதனை… ஆர்ச்சர் வேதனை!

image

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 WC அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்தார். அதில் 7 சிக்சர்களும் அடங்கும். இதன்மூலம் டி20 WC வரலாற்றில் அதிக சிக்சர்கள்(16) அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதேசமயம், டி20 WC நாக் அவுட் போட்டியில் 50+ ரன்களை வாரி வழங்கிய பவுலர் எனும் மோசமான சாதனையை இங்கிலாந்தின் ஆர்ச்சர் (61 ரன்கள்) படைத்துள்ளார்.

error: Content is protected !!