News April 4, 2025
விரைவில் 5Gக்கு அப்டேட் ஆகும் BSNL

BSNL நிறுவனத்திற்கு ₹61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் BSNL விரைவில் 5ஜி சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4ஜி சேவை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அந்நிறுவனம் பெரும் வாடிக்கையாளர் இழப்பை சந்தித்தது. இருப்பினும், 5G சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் BSNL ஒரு புதிய அடையாளத்தைப் பெறும் என நம்பலாம்.
Similar News
News September 19, 2025
₹175 கோடி சம்பளம் வாங்கும் அஜித்?

நடிகர் அஜித் தன்னுடைய சம்பளத்தை ₹25 கோடி உயர்த்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் அவர், அக். மாதத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ₹150 கோடி வாங்கி கொண்டிருந்த அஜித், இந்த படத்திற்கு ₹175 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். ‘குட் பேட் அக்லி’ பெற்ற வெற்றியினால் தயாரிப்பு நிறுவனமும் ஒகே சொல்லியதாக தகவல்.
News September 19, 2025
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதற்கான ஆன்மிக காரணம் உங்களுக்கு தெரியுமா? ஜோதிடத்தில் கன்னி ராசியின் அதிபதியான புதன், விஷ்ணு பகவானின் சொரூபமாகவும், பெருமாளுக்கு உரிய கிரகமாகவும் பார்க்கப்படுகிறார். புதன் சைவப்பிரியர் என்ற காரணத்தால் அவர் ஆட்சி செய்யும் கன்னி ராசிக்கான புரட்டாசி மாதத்தில், அசைவ உணவுகள் தவிர்க்கப்படுவதாக முன்னோர்கள் கூறுகின்றனர்.
News September 19, 2025
ரீசார்ஜுக்கு தள்ளுபடி தரும் BSNL.. கட்டணம் குறைகிறது

பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை BSNL அறிவித்துள்ளது. BSNL-ன் அதிகாரப்பூர்வ தளம் அல்லது மொபைல் செயலியில் இருந்து ரீசார்ஜ் செய்தால் 2% தள்ளுபடி கிடைக்கும். இது ₹199, ₹489, ₹1999 ரீசார்ஜ்களுக்கு மட்டும் பொருந்தும். 2% தள்ளுபடி என்பதால் ₹1999 ரீசார்ஜுக்கு ₹38, ₹485 ரீசார்ஜுக்கு ₹9.6, ₹199 ரீசார்ஜுக்கு ₹3.8 தள்ளுபடி கிடைக்கும். அக்.15 வரை இந்த தள்ளுபடி நடைமுறையில் இருக்கும். SHARE IT.