News December 29, 2024
BSNL புதிய சலுகை: ₹277 உடனே ரீசார்ஜ் செய்யவும்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு BSNL நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ₹277 ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற கால்ஸ் & 120 GB அதிவேக டேட்டா வழங்குகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 GB பயன்படுத்த முடியும். இதன் வேலிடிட்டி காலம் 60 நாட்களாகும். இந்த ஆஃபர் ஜன 16, 2025 வரை மட்டுமே கிடைக்கும். இருப்பினும், சிக்னல் & நெட்வொர்க் வேகம் குறைவாக இருப்பதாக, BSNL மீது வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Similar News
News August 15, 2025
யானை – டிராகன் இணைய வேண்டிய நேரம்: சீனா

இந்தியாவும் (யானை), சீனாவும் (டிராகன்) இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டும் மிகப்பெரிய வளரும் நாடுகள் எனவும், இருநாட்டு வளர்ச்சிக்கும் இணைந்து பணியாற்றுவது தான் சரியான தேர்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்திய பொருள்களுக்கான அமெரிக்க வரிவிதிப்பு, PM மோடியின் சீன பயணங்களுக்கு மத்தியில் அந்நாடு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
News August 15, 2025
கட்டணத்தை உயர்த்திய SBI

வங்கிக் கணக்கில் இருந்து IMPS டிரான்ஸ்பர் முறையில் பணம் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்களை உயர்த்துவதாக SBI வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ₹25,000 வரையான தொகைக்கு கட்டணம் இல்லை. ஆனால், ₹25,000 முதல் ₹1,00,000 வரை- ₹2+GST, ₹1,00,000 முதல் ₹2,00,000 வரை- ₹6+GST, ₹2,00,000 முதல் ₹5,00,000 வரை- ₹10+GST கட்டணம் இருக்கும். இந்த புதிய கட்டண விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
News August 15, 2025
2050-ல் ₹1 கோடியின் மதிப்பு என்ன?

இன்று உங்கள் கையில் ₹1 கோடி இருந்தால், 2050-ல் அதன் மதிப்பு ₹29.53 லட்சத்திற்கு சமமாக இருக்கும். இன்று ₹1 கோடிக்கு கிடைக்கும் வீடு, 2050-ல் ₹3.4 கோடியாக இருக்கும். இதற்கு காரணம் பணவீக்கம். பொருட்களின் விலை அதிகரித்து மக்களின் வாங்கும் திறன் குறையும். கடந்த 20-25 ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் 6%-க்கும் அதிகமாக உள்ள நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு 5% என்று தொடர்ந்தால் கூட மேற்கூறியதுதான் நடக்கும்.